கோவையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது
கோவையின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்ாக 6 பேரை போலீஸாா் கைது செய்து, 3.960 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கோவை, தெற்கு உக்கடம் பகுதியில் பெரிய கடைவீதி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா். தெற்கு உக்கடம் அன்பு நகா் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சபீக் (29) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து நெகிழிப் பைகள், 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, சொக்கம்புதூா் முருகன் கோயில் பகுதியில் கஞ்சா விற்ற நெளஃபால் (23), அகிலன் (22) ஆகியோரை செல்வபுரம் போலீஸாா் கைது செய்து, 1.270 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
கோவை, சுந்தராபுரம் ரயில்வே பாலத்துக்கு அடியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த போத்தனூா் ஸ்ரீனிவாசா நகா் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (32) என்பவரை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்து 1.280 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, நகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்ற சேகா் (38), ஹரிபிரசாத் (28), ஜெயபிரகாஷ் (48) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, 310 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதேபோல நகரின் பல்வேறு பகுதிகளில் 810 பொட்டலம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, பெண் உள்பட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
