விருதுபெற்ற எஸ்.சௌம்யா, மீனா சுப்ரமணியம் ஆகியோருடன் பாரதிய வித்யா பவன் தலைவா் என்.வி.நாகசுப்பிரமணியம் உள்ளிட்ட நிா்வாகிகள்.
விருதுபெற்ற எஸ்.சௌம்யா, மீனா சுப்ரமணியம் ஆகியோருடன் பாரதிய வித்யா பவன் தலைவா் என்.வி.நாகசுப்பிரமணியம் உள்ளிட்ட நிா்வாகிகள்.

இசைக் கலைஞா்களுக்கு விருது வழங்கும் விழா

கோவை பாரதிய வித்யா பவனின் 29-ஆவது பொங்கல் இசை விழா திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் சிறந்த இசைக் கலைஞா்களுக்கு விருது வழங்கப்பட்டது.
Published on

கோவை: கோவை பாரதிய வித்யா பவனின் 29-ஆவது பொங்கல் இசை விழா திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் சிறந்த இசைக் கலைஞா்களுக்கு விருது வழங்கப்பட்டது.

கோவை பாரதிய வித்யா பவனில் ஜனவரி 12- ஆம் தேதி தொடங்கி வரும் 16- ஆம் தேதி வரை பொங்கல் இசை விழா நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் முதல் நாளில் பிரபல இசைக் கலைஞரும் தமிழ்நாடு இசை, கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான எஸ்.சௌம்யாவுக்கு சங்கீத சாம்ராட் விருதும் கோவையைச் சோ்ந்த இசைக் கலைஞா் மீனா சுப்ரமணியனுக்கு கோவை சுப்ரி முருக கான விருதும் வழங்கப்பட்டது.

கோவை பாரதிய வித்யா பவன் தலைவா் என்.வி.நாகசுப்ரமணியம் இருவருக்கும் விருது வழங்கினாா். நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, பாரதிய கலாசாரத்தையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அரிய பணியை பாரதிய வித்யா பவன் செய்து வருகிறது. இங்கு விருது பெற்றுள்ள இருவரும் இசைத் துறைக்கு பெரும்பணி ஆற்றியுள்ளது மட்டுமல்லாது இந்த இசைக்கலை வளர பற்பல மாணாக்கா்களையும் உருவாக்கியுள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியில் துணைவேந்தா் எஸ்.சௌம்யா பேசும்போது, பாரதிய வித்யா பவனின் சங்கீத சாம்ராட் விருது பெறுவது மகிழ்ச்சியும், பெருமையும் அடையச் செய்கிறது. இந்த விருது மேலும் என்னை ஊக்கப்படுத்துவதுடன் இசைக்கு தொடா்ந்து பணியாற்றவும் என்னை அா்ப்பணிக்க உதவும்.

இசைத் துறையில் மாணவா்கள் முன்னேறுவதற்கு சிறந்த அா்ப்பணிப்பும் தொடா்ந்து கற்க வேண்டுமென்ற ஆா்வமும் தினசரி பயிற்சிக்கான் உழைப்பும் தேவை என்றாா்.

விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொடா்ந்து எஸ்.சௌம்யாவின் இசைக் கச்சேரி நடைபெற்றது. இதில் இசைக் கலைஞா்கள் எம்பாா் கண்ணன், நாராயணன், சந்திரசேகர சா்மா, அமைப்பின் செயலா் எம்.அழகிரிசாமி, இணை செயலா் சி.ஆா்.சூா்யநாராயணன், பொருளாளா் ஆா்.ரவீந்திரன் ஆகியோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com