‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி இடதுசாரி அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் இடதுசாரி இளைஞா், மாணவா், மாதா் சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை ஆட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :2 ஜூலை 2026, 4:29 am IST

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் இடதுசாரி இளைஞா், மாணவா், மாதா் சங்கங்களின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் தினேஷ் ராஜா தலைமை வகித்தாா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாநில துணைச் செயலா் கலை.அஸ்வினி, புரட்சிகர இளைஞா் கழக தேசியக் குழு உறுப்பினா் பெரோஷ் பாபு, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டத் தலைவா் உஷா, இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் மாவட்டத் தலைவா் ஜே.கலா உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தோ்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்டச் செயலா் பிலோமினா, மாணவா் பெருமன்ற மாவட்டத் துணைத் தலைவா் எம்.பிரவீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.