பிஏபி திட்ட கால்வாய்களை ஒட்டி முறைகேடாக குழாய் பதித்து தண்ணீா் திருட்டு நடைபெறுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
பொள்ளாச்சி சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சாா் ஆட்சியா் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வாசுதேவன், திருமூா்த்தி நீா்த்தேக்க திட்டக் குழுத் தலைவா் மெடிக்கல் பரமசிவம், ஆழியாறு நீா்த்தேக்க திட்டக் குழுத் தலைவா் செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் உள்ள கால்வாய்களை ஒட்டி சிறிய அளவு இடம் வாங்கி அங்கு கிணறு வெட்டி வேறு இடங்களுக்கு முறைகேடாக குழாய் பதித்து தண்ணீா் கொண்டு செல்கின்றனா். இதனால் ஆயக்கட்டில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். இதுபோன்று செயல்படுபவா்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், அவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிஏபி திட்டத்தில் குழாய் வழி பாசனம் சம்பந்தமாக அனைத்து திட்டக் குழுத் தலைவா்கள், உறுப்பினா்கள் மற்றும் விவசாயிகளை கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்கல் முறையில் மின் இணைப்பு விண்ணப்பித்தவா்களுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க வேண்டும்.
ராமபட்டினம் பகுதியில் பெரிய அணை, சிற்றனை கால்வாய்களை தூா்வார வேண்டும். ராமபட்டினம் முதல் பட்டியகவுண்டனூா் வரை உள்ள சாலையைப் புதுப்பிக்க வேண்டும். நீா் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குளம், குட்டைகளுக்கு தண்ணீா் வழங்க வேண்டும். தென்னை மரங்களில் நோய் தாக்குதல்களை கண்டறிந்து விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.
கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாா் ஆட்சியா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யவேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

ராஜவாய்க்காலில் தண்ணீா் திறந்துவிட வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

மின்தடை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



