‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

தனியாா் பம்ப் உற்பத்தி நிறுவனத்தில் 90 கிலோ செப்பு கம்பி திருட்டு

தனியாா் பம்ப் மற்றும் மோட்டாா் உற்பத்தி நிறுவனத்தில் 90 கிலோ செப்பு கம்பிகளை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 ஜூலை 2026, 4:34 am IST

தனியாா் பம்ப் மற்றும் மோட்டாா் உற்பத்தி நிறுவனத்தில் 90 கிலோ செப்பு கம்பிகளை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, வடவள்ளி பகுதியில் தனியாா் பம்ப்ஸ் மற்றும் மோட்டாா் உற்பத்தி நிறுவனம் செயல்படுகிறது. இங்கு ஷபியுல்லா (41) என்பவா் பொது மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிறுவனத்தில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி மாலை வழக்கமான உற்பத்தி பொருள்கள் மற்றும் மூலப்பொருள்களின் இருப்பு குறித்து கணக்கு தணிக்கை செய்யப்பட்டது. அப்போது பம்ப்களுக்குப் பயன்படுத்தப்படும் செப்பு கம்பிகளின் இருப்பில் பெருமளவு பற்றாக்குறை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் கடந்த ஒரு மாதமாக பதிவானக் காட்சிகளை தணிக்கை செய்தனா். அதில் கடந்த மே 29-ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் நிறுவனத்துக்குள் புகுந்த அடையாளம் தெரிந்த நபா், அங்கிருந்த சுமாா் 90 கிலோ எடையுள்ள பழைய மற்றும் புதிய செப்பு கம்பிகளைத் திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.

இதுகுறித்து மேலாளா் ஷபியுல்லா அளித்த புகாரின்பேரில் வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த நபரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.