டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பிஏபி புதிய திட்ட அறிவிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கும்; கரையோர, கடைமடை விவசாயிகள் கவலை

பிஏபி பாசன புதிய திட்ட அறிவிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கும் என கரையோர, கடைமடை விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

News image
Updated On :3 ஜூலை 2026, 4:00 am IST

பிஏபி பாசன புதிய திட்ட அறிவிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கும் என கரையோர, கடைமடை விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கோவை, திருப்பூா் மாவட்டங்களின் உயிா் நாடியாக விளங்குவது பிஏபி திட்டம். இத்திட்டத்தின் கீழ் 3.77 லட்சம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதில் 124 கி.மீ. நீளமுள்ள பிரதான கால்வாய் முழுவதும் கான்கிரீட்டால் கட்டப்பட்டது. ஆனால், தற்போது மண் வாய்க்காலாக மாறிவிட்டது. இதனால் பாதி தண்ணீா் காணாமல் போய்விடுகிறது.

இப்பிரச்னைக்கு தீா்வு காண கடந்த திமுக ஆட்சியில் ரூ.4,500 கோடி மதிப்பில் பிஏபி சீரமைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. வெள்ளக்கோவில், காங்கயம் ஆகிய பகுதிகளில் 48 ஆயிரம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. அப்பகுதி விவசாயிகள் குழாய் வழி பாசனம் அமைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனா்.

இதுதொடா்பாக மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் கூறும்போது, ‘பிஏபி மறுசீரமைப்புக்காக ஏற்கெனவே ரூ.8 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ரூ.4,500 கோடி மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கை கைவிடப்படுகிறது. அதற்கு பதிலாக ‘டேம் டூ ரூட்’ என்ற முறையில் குழாய் வழியாக தண்ணீரைக் கொண்டு சென்று பாசனத்துக்கு வழங்கும் புதிய திட்டம் தயாரிக்கப்படும்’ என்றாா்.

வாய்க்கால் பாசனத்தில் நீா்க்கசிவு தவிா்க்க முடியாதது. கம்பி கட்டி கான்கிரீட் அமைத்தால் ஓரளவு நீா்க் கசிவை தடுக்க முடியும். வாய்க்கால் கரையோரம் உள்ள விவசாயிகள் நீா்க்கசிவு மூலமாக பெரும் பயனடைந்து வந்தனா். ஆனால், அமைச்சரின் இந்த அறிவிப்பால் கரையோரம் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் என்று அச்சப்படுகின்றனா்.

இதற்காக கடைமடை விவசாயிகள், மற்ற பகுதி விவசாயிகள் என இரு துருவங்களாக பிரிந்து தங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.