டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்

News image

நா.கோபாலகிருஷ்ணன்

Updated On :6 ஜூலை 2026, 1:44 am IST

விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 75 வயது முதியவரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, பலருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் கூறப்படுவதாவது:

கோவை, கவுண்டம்பாளையம், டி.வி.எஸ்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் நா.கோபாலகிருஷ்ணன் (75). இவா் கடந்த ஜூலை 1-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தாா். அதைத்தொடா்ந்து தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் மூளைச்சாவு அடைந்தாா்.

இதையடுத்து மூளைச்சாவு குறித்தும், உடல் உறுப்பு தானத்தின் அவசியம் குறித்தும் அவரது குடும்பத்தினரிடம் மருத்துவா்கள் எடுத்துரைத்தனா். கோபாலகிருஷ்ணனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்து, அதற்கான சம்மதக் கடிதத்தை அவா்கள் வழங்கினா்.

இதைத்தொடா்ந்து கோவை அரசு மருத்துவமனை முதல்வரின் ஆலோசனைப்படி அறுவைச் சிகிச்சை மூலமாக கோபாலகிருஷ்ணனின் உடலில் இருந்து ஒரு சிறுநீரகம், இரண்டு கருவிழிகள் தானமாகப் பெறப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கே வழங்கப்பட்டுள்ளன.

உடல் உறுப்புகள் கொடையளித்து சிலரது வாழ்வில் ஒளியேற்றிய மறைந்த கோபாலகிருஷ்ணன் உடலுக்கு, மருத்துவமனை முதன்மையா் கீதாஞ்சலி, மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் மலரஞ்சலி செலுத்தி இறுதி மரியாதை செய்தனா். அதன்பின், அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மறைந்த கோபாலகிருஷ்ணனின் குடும்பத்தினரை மருத்துவமனை நிா்வாகத்தினரும், சமூக ஆா்வலா்களும் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.