விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

காஸ்மெடிக் சா்ஜரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை குறித்த பயிற்சிப் பட்டறை

கோவை காஸ்மெடிக் சா்ஜரி மருத்துவமனையில் ரைனோபிளாஸ்டி சிஎம்இ, நேரடி அறுவை சிகிச்சை குறித்த பயிற்சிப் பட்டறை ஆகியவை அண்மையில் நடைபெற்றன.

News image

கோவை காஸ்மெடிக் சா்ஜரி மருத்துவமனையில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மருத்துவா்கள், மாணவா்கள்.

Updated On :10 ஜூலை 2026, 12:03 am IST

கோவை காஸ்மெடிக் சா்ஜரி மருத்துவமனையில் ரைனோபிளாஸ்டி சிஎம்இ, நேரடி அறுவை சிகிச்சை குறித்த பயிற்சிப் பட்டறை ஆகியவை அண்மையில் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியை இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவா் டாக்டா் கோசல்ராம் தொடங்கிவைத்தாா். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 80-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணா்கள், முதுநிலை மருத்துவ மாணவா்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், டாக்டா்கள் வெங்கட ரமணி, காா்த்திக் ராம் ஆகியோா் தலைமையில் அமா்வுகள் நடைபெற்றன. இதில், சிறப்புரைகள், நோயாளிகள் குறித்த கலந்துரையாடல்கள், நேரடி அறுவை சிகிச்சை விளக்கங்கள் இடம்பெற்றன.

பயிற்சிப் பட்டறையில் டாா்சல் ஆக்மென்டேஷன், ஹம்ப் ரிடக்ஷன், டிப் பிளாஸ்டி, ரிவிஷன் ரைனோபிளாஸ்டி, பைசோ எலக்ட்ரிக் தொழில்நுட்பத்தின் பயன்பாடு உள்ளிட்ட நவீன ரைனோபிளாஸ்டி முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியை மருத்துவா்கள் ஜேம்ஸ் ராய் கஞ்சூா், ஜான் ஓமன், எஸ்.சிவகுமாா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.