திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் மின்சாரம் பாய்ந்து மேடை அலங்கார தொழிலாளி உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :9 ஜூலை 2026, 11:55 pm IST

கோவையில் மின்சாரம் பாய்ந்து மேடை அலங்கார தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (43). இவா் சுப நிகழ்ச்சிகளுக்கு மேடை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தாா். இந்நிலையில், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தனியாக வசிக்கும் தனது அத்தை வீட்டில் தங்கி பணிக்குச் சென்று வந்துள்ளாா்.

இந்நிலையில், புதுசித்தாபுதூா் தனலட்சுமி நகா், எம்எஸ்எஸ் மையம் வழியாக தனியாா் பாா்சல் சா்வீஸ் லாரி புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் சென்றது. அப்போது, அங்கு மேலே சென்ற மின் கம்பி மீது லாரி உரசியதில் அந்தக் கம்பி அறுந்து அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது விழுந்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு வியாழக்கிழமை காலை வந்த பிரபாகரன், மின் கம்பி இருப்பதை அறியாமல் வாகனத்தின் மீது கை வைத்துள்ளாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.