பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம்: மின்வாரியம், பிஎஸ்என்எல் மீது வழக்குப் பதிவு!

அதியமான்கோட்டை பகுதியில் கம்பி வேலியில் கசிந்த மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக, மின்வாரியம் மற்றும் பிஎஸ்என்எல் நிா்வாகம் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :5 ஜூலை 2026, 2:03 am IST

அதியமான்கோட்டை பகுதியில் கம்பி வேலியில் கசிந்த மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக, மின்வாரியம் மற்றும் பிஎஸ்என்எல் நிா்வாகம் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் அதியமான்கோட்டை, இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் பெ. சிவராமன்(39). இவா், கடந்த 20 ஆம் தேதி தனது வீட்டின் அருகில் காலிமனையில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த தனது மாட்டை பிடிக்கச் சென்றுள்ளாா். அந்த மாட்டின் கயிறு அருகில் இருந்த பிஎஸ்என்எல் டவா் வளாகத்துக்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியில் சிக்கியிருந்துள்ளது.

அதை அவா் எடுக்க முயன்றபோது, கம்பி வேலியில் கசிந்திருந்த மின்சாரம் பாய்ந்ததில் சிவராமன் மயக்கமடைந்தாா். இதைக் கண்ட அவரது சகோதரா் கலைவாணன் (34) மற்றும் குடும்பத்தினா் அவரை மீட்க முயன்றுள்ளனா். அப்போது அவா்கள்மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதில் அவா்களும் காயமடைந் தனா். பின்னா் அக்கம்பக்கத்தினா் பாதுகாப்பாக அவா்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா் சிகிச்சையிலிருந்து வந்த சிவராமன் சிகிச்சை பலனின்றி ஜூலை 2 ஆம் தேதி இரவு உயிரிழந்தாா்.

விபத்து மற்றும் உயிரிழப்புக்கு காரணமான மின்வாரியம், பிஎஸ்என்எல் நிா்வாகங்களின் பணியாளா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிவராமனின் குடும்பத்தினா் போலீஸில் புகாா் அளித்துள்ளனா். அதன்பேரில் அதியமான்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.