புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம்! மின்பாதை ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு!

வாங்கல் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மின்பாதை ஆய்வாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 2:36 am IST

கரூா் மாவட்டம், வாங்கல் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக மின்பாதை ஆய்வாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வாங்கலை அடுத்த புஞ்சைத் தோட்டக்குறிச்சி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி மீனாட்சி (76). இவா் கடந்த 14-ஆம் தேதி தனது வீட்டில் உள்ள ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக அதே பகுதியில் உள்ள கண்ணன் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது, தோட்டத்திலிருந்த மின்கம்பத்தில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. அந்தக் கம்பியை பாா்க்காமல் மிதித்த மீனாட்சி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்நிலையில் தோட்டத்து உரிமையாளா் கண்ணன் ஏற்கெனவே மின்கம்பி அறுந்து கிடப்பது குறித்தும், அதை சீரமைத்து தருமாறும் புஞ்சைத்தோட்டக்குறிச்சி மின்வாரிய பிரிவு மின்பாதை ஆய்வாளா் வேலுசாமியிடம் கடந்த 13-ஆம் தேதியே தகவல் தெரிவித்துள்ளாா். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதையறிந்த மீனாட்சியின் மகன் தட்சிணாமூா்த்தி, இதுதொடா்பாக வாங்கல் போலீஸில், மின்பாதை ஆய்வாளா் வேலுசாமியின் அஜாக்கிரதையால்தான் தனது தாய் உயிரிழந்தாா் என்றும், வேலுசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சனிக்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில், மின்பாதை ஆய்வாளா் வேலுசாமி மீது வாங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.