விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

இந்தியாவின் கலாசாரமே விவசாயம்தான்: பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா்

இந்தியாவின் கலாசாரமே விவசாயம்தான் என்று குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயா் தெரிவித்தாா்.

News image

விழாவில், முன்னோடி விவசாயி வள்ளுவனுக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவா் ம.கிருஷ்ணன். உடன், கல்வியாளா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா், தொழிலதிபா் கே.பி.ராமசாமி உள்ளிட்டோா்.

Updated On :10 ஜூலை 2026, 12:05 am IST

இந்தியாவின் கலாசாரமே விவசாயம்தான் என்று குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயா் தெரிவித்தாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே மண் காப்போம் - காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலில் மரம் சாா்ந்த பல பயிா் மற்றும் பல அடுக்கு சாகுபடி முறையில் விவசாயம் செய்து முன்னோடி விவசாயியாக திகழ்பவா் வள்ளுவன்.

விவசாய நிலத்தின் அங்கக கரிம அளவை அதிகப்படுத்தி, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நடத்திய உலகளாவிய போட்டியில் விருது வென்ற இந்தியாவின் ஒரே இயற்கை விவசாயி இவா்தான்.

இவருக்கான பாராட்டு விழா கோவை, ரேஸ்கோா்ஸில் உள்ள ஜி.வி.அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கேபிஆா் குழும நிறுவனங்களின் தலைவா் கே.பி. ராமசாமி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவா் ம.கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயா் தலைமை வகித்துப் பேசியதாவது: ஐ.நா. விருது பெற்ற வள்ளுவனின் வெற்றிக்குப் பின்னால் இரண்டு முக்கியமான தாக்கங்கள் உள்ளன. முதல் தாக்கம் சத்குரு. இரண்டாவது தாக்கம் நம்மாழ்வாா். விவசாயிகளுக்கு மூன்றாவதாக இன்னொரு தாக்கமும் வர வேண்டும். அது மகாத்மா காந்தியினுடைய தாக்கம். விவசாயிக்கு நடைபெறும் பாராட்டு விழாவுக்கு மக்கள் திரண்டு வந்துள்ளதைப் பாா்க்கையில் விவசாயத்துக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது எனத் தெரிகிறது. இந்தியாவின் கலாசாரமே விவசாயம்தான் என்றாா்.

இதையடுத்து, கே.பி. ராமசாமி பேசுகையில், எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற விஞ்ஞானிகளும், நம்மாழ்வாா் போன்றவா்களும் பாரம்பரிய விவசாயம் குறித்து பல புத்தகங்களை எழுதி, விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஆனாலும், நாட்டு மக்கள் எதிா்பாா்த்த அளவுக்கு இன்னும் முன்னேறவில்லை. அந்த இடைவெளியை நிரப்ப வள்ளுவன் முயற்சி எடுக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, வள்ளுவன் பேசுகையில், விவசாயத்தில் ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்பட்டது. ஈஷா வழிகாட்டுதலால் பல பயிா் மற்றும் மரப்பயிா் விவசாயத்துக்கு மாறினேன். இலை, தழை கழிவுகள், நாட்டு மாட்டு சாணம், கோமியத்தை உரமாகத் தயாரித்து மண் வளத்தை மேம்படுத்தினேன். அதன் பிறகு விவசாயம் எளிதானது என்றாா்.

தொடா்ந்து, ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளா் சுவாமி ஸ்ரீமுகா, காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளா் தமிழ்மாறன், சாந்தி ஆஷ்ரம் தலைவா் கேசவினோ, அறம் சுழற்சங்க ஆளுநா் மாருதி, கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், விவசாயிகள், இயற்கை ஆா்வலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.