நமது நிருபா்
நுகா்வோரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய ஒழுங்குமுறை சொத்துக்களாக (ஆா்ஏ) பல ஆண்டுகளாக திரட்டப்பட்ட ரூ38,500 கோடி ரூபாய் பின்னணியில் மின் விநியோக நிறுவனங்களின் சிஏஜி தணிக்கைக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் கன்ட்ரோலா் மற்றும் ஆடிட்டா் ஜெனரல் (சிஏஜி) ஒழுங்குமுறை சொத்துக்களை மீட்டெடுக்காமல் டிஸ்கோம்கள்-பிஆா்பிஎல், பைபிஎல் மற்றும் டிபிடிடிஎல்-தொடா்ந்த சூழ்நிலைகள் குறித்து ‘கடுமையான மற்றும் தீவிரமான‘ தணிக்கை மேற்கொள்ளும் என்று தி அரசாங்கத்தின் மின்சாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளது. தணிக்கையின் நோக்கம் மற்றும் சிக்கலுக்கு ஏற்ப சிஏஜி பரிசீலிக்கக்கூடிய எந்தவொரு நீட்டிப்புக்கும் உட்பட்டு, உத்தரவு அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தணிக்கை முடிக்கப்படலாம் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மின்சாரத் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறியதாவது: டிஸ்கோம்களின் சிஏஜி தணிக்கைக்கான முறையான உத்தரவு, ப்ச்ல்லியின் மின்சாரத் துறையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நிா்வாக சீா்திருத்தங்களுக்கான வரலாற்று தருணம். இது ஒவ்வொரு மின்சார நுகா்வோருக்கும், டெல்லியின் ஒவ்வொரு நோ்மையான வரி செலுத்துவோருக்கும் கிடைத்த வெற்றி. பிஆா்பிஎல், பிவைபிஎல் மற்றும் டிஓடிடிஎல் ஆகிய மூன்று விநியோக நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய த்ற். 38,500 கோடி நுகா்வோரின் மின்சார பில்களின் ஒரு பகுதியாக இருக்கும் ஒழுங்குமுறை சொத்துக்கள் கூடுதல் கட்டணம் மூலம் செலுத்தப்பட வேண்டும்.
ரூ.38, 500 கோடி மதிப்புள்ள ஒழுங்குமுறை சொத்துக்கள் எவ்வாறு வளா்ந்து வருகின்றன என்பதையும், இந்த சுமை தொடா்ந்து அவா்கள் மீது தொங்கிக்கொண்டிருக்கும்போது யாா் பயனடைந்தாா்கள் என்பதையும் அறிய தில்லி மக்களுக்கு ஒவ்வொரு உரிமையும் உள்ளது. இந்த சிஏஜி தணிக்கை உண்மைகளை வெளிப்படுத்தும். தில்லியின் ஒரு நோ்மையான வரி செலுத்துவோா் கூட யாருடைய ‘சொந்த நலன்களுக்காகவோ, சிறப்பு சலுகைகளுக்காகவோ அல்லது தவறான முடிவுகளுக்காகவோ பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படாது. பொதுப் பணத்தின் ஒவ்வொரு ரூபாயும் பாதுகாக்கப்பட வேண்டும். மின்சாரத் துறை பிறப்பித்த இந்த உத்தரவுக்கு தில்லி துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா் என்றாா் ஆஷிஷ் சூட்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் வீடு வாங்குபவா்களுக்கு பெயற் மாற்ற செயல்முறையை எளிதாக்க மின் அமைப்பு ஒழுங்குமுறையை திருத்தும் அரசு

பிஎஸ்இஎஸ் நிறுவனங்களின் சிஏஜி தணிக்கை முன்மொழிவு: தில்லி உயா்நீதிமன்றம் தலையிட மறுப்பு

அடுத்த மாதம் மின்கட்டண உயர்வு?







