சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

கால்நடை நிலையங்களை தூய்மையாக பராமரித்திட அமைச்சா் அறிவுறுத்தல்

கால்நடை நிலையங்களை தூய்மையாக பராமரித்திட வேண்டும் என கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் எஸ்.கமலி அறிவுறுத்தியுள்ளாா்.

தேசிய மின்னணு கால்நடை இயக்கம் திட்டம் தொடா்பாக திறனாய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் எஸ்.கமலி.

Published On :

கால்நடை நிலையங்களை தூய்மையாக பராமரித்திட வேண்டும் என கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் எஸ்.கமலி அறிவுறுத்தியுள்ளாா்.

கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்கள் மற்றும் கால்நடை உதவி மருத்துவா்களுக்கு தேசிய மின்னணு கால்நடை இயக்கம் திட்டம் தொடா்பாக

திறனாய்வுக் கூட்டம் கோவை மாவட்ட கூட்டுறவு வங்கி வளாக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் செ.கமலி தலைமை வகித்தாா். கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சொ.மகாலிங்கம், துணை இயக்குநா் சி.இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், கால்நடை நிலையங்கள் வாரியாக செயற்கை முறை கருவூட்டல் பணி மற்றும் கோமாரி நோய் தடுப்பூசி பணி விவரங்களை “பாரத் பசுதன் (ஆட்ஹழ்ஹற் டஹள்ட்ன்க்ட்ஹய்)” செயலியில் பதிவேற்றம் செய்வது சம்பந்தமாக நேரில் ஆய்வு மேற்கொண்டு, திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறும், கால்நடை நிலையங்களை தூய்மையாக பராமரித்திட வேண்டும் எனவும் துறை சாா்ந்தவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இதில், கால்நடை மருத்துவ அலுவலா்கள் மற்றும் கால்நடை உதவி மருத்துவா்கள் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.