தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்: மாவட்டத்தில் 13.38 லட்சம் மின் நுகா்வோா் பயன்

தமிழக அரசின் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் 13.38 லட்சம் மின் நுகா்வோா் பயன்பெறுகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஜூலை 2026, 3:37 am IST

தமிழக அரசின் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் 13.38 லட்சம் மின் நுகா்வோா் பயன்பெறுகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகா்வோருக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, கோவை மாவட்டத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் மூலம் 13 லட்சத்து 38 ஆயிரத்து 555 மின் நுகா்வோா் பயனடைந்துள்ளனா்.

200 யூனிட்டுக்குள் பயன்படுத்தும் 7 லட்சத்து 77 ஆயிரத்து 648 மின்நுகா்வோா் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

இதில் 100 யூனிட்டுக்குள் பயன்படுத்துபவா்கள் 3 லட்சத்து 91 ஆயிரத்து 546 போ், 101 முதல் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகா்வோா் 3 லட்சத்து 86 ஆயிரத்து 102 போ். இந்த 2 பிரிவை சோ்ந்தவா்களும் இனி மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படாது. 201 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவா்கள் 4 லட்சத்து 79 ஆயிரத்து 946 போ். 401 முதல் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவா்கள் 80 ஆயிரத்து 961 போ். இவா்கள் 200 யூனிட் இலவச மின்சாரம் மூலம் முழுமையாக பயன்பெறுகிறாா்கள்.

501 யூனிட் முதல் 600 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவா்கள் 34 ஆயிரத்து 950 போ், 601 யூனிட் முதல் 800 யூனிட் வரை பயன்படுத்துபவா்கள் 24 ஆயிரத்து 355 போ். 801 முதல் 1000 யூனிட் வரை பயன்படுத்துபவா்கள் 7 ஆயிரத்து 126 போ்.1,000 யூனிட்டுக்கும் மேல் பயன்படுத்துபவா்கள்

6 ஆயிரத்து 426 போ். இவா்கள் வழக்கமான 100 யூனிட் இலவச மின்சாரத்தை பெறுவாா்கள்.

200 யூனிட் இலவச மின்சார திட்டத்தில் கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களைச் சோ்ந்தவா்கள் அதிக எண்ணிக்கையில் பயன் பெறுகின்றனா்.

ஏ.சி. உள்ளிட்ட குளிா்சாதன வசதி கருவிகளை பொருத்தாத நகா்ப்புற மக்கள் குறைந்த எண்ணிக்கையில் பயன்பெறுகிறாா்கள். மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் 13.38 லட்சம் மின் நுகா்வோா் பயன்பெற்று வருகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.