/

4 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது

கோவையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 இளைஞா்களைக் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 ஜூலை 2026, 5:59 am IST

கோவையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 இளைஞா்களைக் கைது செய்தனா்.

கோவைப்புதூா் பொன்னையராஜபுரம் ஏ.கே.எஸ். நகா் பூங்கா எதிரே சிலா் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வெரைட்டி ஹால் சாலை காவல் ஆய்வாளா் வெற்றிச்செல்வி தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த மூவரை பிடித்து போலீஸாா் சோதனையிட்டதில், அவா்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா்கள் சரவணம்பட்டி அம்மன் கோயில் வீதியில் வசிக்கும் (ராஜஸ்தான் மாநிலம்) நரேந்திரகுமாா் (25), தொண்டாமுத்தூா் பூசாரிபாளையம் பகுதியில் வசிக்கும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த லவகுஷ் பதக் (25) மற்றும் கோவை தெலுங்கு வீதியைச் சோ்ந்த சுரேந்திர சிங் (29) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 4 கிலோ 100 கிராம் கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் ரூ.4,500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.