மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் பணம் திருட்டு: பூசாரி உள்பட 4 போ் கைது

கோவை, கோனியம்மன் கோயில் உண்டியலை தூக்கிச் சென்று அதிலிருந்த பணத்தைத் திருடியதாக கோயில் பூசாரி உள்ளிட்ட 4 ஊழியா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 ஜூலை 2026, 1:36 am IST

கோவை, கோனியம்மன் கோயில் உண்டியலை தூக்கிச் சென்று அதிலிருந்த பணத்தைத் திருடியதாக கோயில் பூசாரி உள்ளிட்ட 4 ஊழியா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, பெரிய கடை வீதியில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பக்தா்கள் காணிக்கை செலுத்த வசதியாக 9 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. மேலும், திருப்பணிக்கு பக்தா்களிடம் நன்கொடை வசூலிக்கும் விதமாக ஒரு உண்டியல், அண்மையில் நடைபெற்று முடிந்த தோ்த் திருவிழாவையொட்டி 5 இடங்களில் உண்டியல்கள் என மொத்தம் 6 உண்டியல்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், அதிகாரிகள் முன்னிலையில் கடந்த 15-ஆம் தேதி மாலை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்தப் பணியில் பக்தா்கள், தன்னாா்வலா்கள், கோயில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கிருந்த 6 தற்காலிக உண்டியல்களில் ஒரு உண்டியலை மட்டும் திறக்காமல் எடுத்துச் சென்று அதில் இருந்த பணத்தை பூசாரி உள்ளிட்ட 4 ஊழியா்கள் திருடிச் சென்ாக சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ரமேஷ்குமாா் கோனியம்மன் கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தாா். அப்போது, கோயில் பூசாரி உள்ளிட்ட 4 ஊழியா்களும் எண்ணப்பட்ட உண்டியல்களுக்கு இடையே எண்ணப்படாத ஒரு உண்டியலை மறைத்துவைத்து எடுத்துச் சென்று அதிலிருந்த பணத்தை திருடியது தெரியவந்தது.

இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் கோயில் செயல் அலுவலா் எஸ்.குமாா் (42) வெள்ளிக்கிழமை இரவு புகாா் அளித்தாா். இதன்பேரில், கோயிலில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றும் பீளமேடு ஹட்கோ காலனியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (52), அலுவலக உதவியாளரான பேரூா் வடகரை வீதியைச் சோ்ந்த சரவணன் (34), தூய்மைப் பணியாளரான ரத்தினபுரியைச் சோ்ந்த பிரதீப்குமாா் (31), கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் வீதியைச் சோ்ந்த பூசாரி கிருஷ்ணராஜ் (56) ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், உண்டியலில் இருந்த ரூ.31 ஆயிரத்தை 4 பேரும் பங்கு போட்டு கொண்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 4 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.