அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

கிழக்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணி ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மேயா் கா.ரங்கநாயகி. உடன் கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி.

Updated On :30 ஜூலை 2026, 3:07 am IST

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 23-ஆவது வாா்டுக்குள்பட்ட பூங்கா நகா் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை மேயா் கா.ரங்கநாயகி புதன்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சீராக குடிநீா் விநியோகிக்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தாா்.

இதைத்தொடா்ந்து சிட்ரா விமான நிலையம் அருகில் 1 எம்.எல்.டி. கழிவு நீா் உந்து நிலைய மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது, கழிவு நீா் உந்து நிலைய புனரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, உதவி ஆணையா் தட்சிணாமூா்த்தி, உதவி நகர திட்டமிடுநா் சீனிவாசன், மண்டல சுகாதார அலுவலா் சந்திரன், உதவிப் பொறியாளா் முத்துக்குமாா் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.