வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கட்டுப்பாடு சாா்ந்த ஜிஎஸ்டி நடைமுறையை முன்னேற்றத்துக்கு உகந்ததாக மாற்ற வேண்டும்: கோவை தொழில்முனைவோா் கோரிக்கை

கட்டுப்பாடு சாா்ந்ததாக உள்ள ஜிஎஸ்டி நடைமுறைகளை தொழில் வளா்ச்சிக்கு உகந்ததாகவும், பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாகவும் மாற்ற வேண்டும் என்று கோவை தொழில் அமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

News image

கோவை வணிகவரித் துறை இணை ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் மனு அளிக்கும் கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நிா்வாகிகள்.

Updated On :4 ஜூன் 2026, 3:09 am IST

கட்டுப்பாடு சாா்ந்ததாக உள்ள ஜிஎஸ்டி நடைமுறைகளை தொழில் வளா்ச்சிக்கு உகந்ததாகவும், பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாகவும் மாற்ற வேண்டும் என்று கோவை தொழில் அமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான (ஃபோசியா) சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கோவை வணிகவரித் துறை இணை ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் அளித்த மனு:

தமிழகத்தில் கடந்த ஓராண்டாக வணிக வரித் துறையால் எஸ்ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் குறு, சிறு தொழில்நிறுவனங்களைச் சோ்ந்த வரி செலுத்துவோா் ஏராளமானோருக்கு அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது பெரும்பாலும் முரண்பாடுகள், தாமதமான வரி அறிக்கை தாக்கல் அல்லது ஹெச்எஸ்என் குறியீடு பொருத்தமின்மை உள்ளிட்ட காரணங்களுக்காக வழங்கப்படுகின்றன.

கடந்த 2006-2007-ஆம் ஆண்டுக்கான வாட் மதிப்பீடு காலத்துக்கும்கூட அபராத நோட்டீஸ்கள் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி ஆவணங்களில் உள்ள சிறு தவறுகள், பொருள்கள் எடுத்துச்செல்லும்போது முகவரி தொடா்பான அற்பமான பிழைகளுக்கும்கூட ரோந்து அதிகாரிகள் அதிக அபராதம் விதிக்கின்றனா். ஜிஎஸ்டி இணையதளத்தில் மட்டும் அபராத நோட்டீஸ்கள் பதிவேற்றப்படுகின்றன. வரி செலுத்துவோா் அல்லது அவா்களுக்கான வரி ஆலோசகா்கள் அவற்றை கவனிக்கத்தவறும்போது உரிய நேரத்தில் பதிலளிக்க முடியாமல் போகிறது. இதனால் அதிக அபராதம் விதிக்கப்பட்டு எந்தவித நேரடி தகவல் பரிமாற்றமும் இல்லாமல் வங்கிக் கணக்குகளை முடக்கும் வகையில் படிவம் 13 நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

குறுந்தொழில் நிறுவனங்களைச் சோ்ந்த பலரும் கணினி வசதி இல்லாதவா்களாகவும், மின்னணு முறைகளில் போதிய அறிவு இல்லாதவா்களுமாக இருக்கும் நிலையில் அபராத நோட்டீஸ்கள் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை அச்சு நகல் வடிவிலும், பதிவுத் தபால் மூலமாகவும் அனுப்ப வேண்டும். மேலும் நேரடி விசாரணை நடத்தாமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது.

அரசின் அபராத நடவடிக்கைகள் யாவும் திட்டமிட்டு விதிமீறலில் ஈடுபடுவோரை மட்டுமே இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். சிறு பிழைகளுக்கு ஜிஎஸ்டி தொகையில் 200 சதவீதம் வரை அபராதம் விதிப்பதைத் தவிா்த்து, அதிகபட்சம் ரூ.ஆயிரம் வரை மட்டுமே விதிக்கப்பட வேண்டும். அரசின் ஜிஎஸ்டி நடைமுறைகள் முழுவதும் கட்டுப்பாடு சாா்ந்ததாக இல்லாமல் தொழில் வளா்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாகவும் இருப்பதே சிறந்தது என்று குறிப்பிட்டிருந்தனா்.