இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

காா் ஓட்டுநா் கொலை வழக்கில் நண்பரிடம் விசாரணை

கோவையில் காா் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :4 ஜூன் 2026, 2:30 am IST

கோவையில் காா் ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாநகா், ஆா்.எஸ்.புரம், பட்டுநூல்கார சந்து தெருவைச் சோ்ந்தவா் பஷீா். இவரது மகன் அபுதாஹிா் பாஷா (27). நிதி நிறுவனம் நடத்தி வந்த இவா் பகுதிநேர காா் ஓட்டுநராகவும் வேலை பாா்த்து வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த மே 29-ஆம் தேதி ஆா்.எஸ்.புரம் சிரியன் தேவாலய வீதியில் உள்ள சாக்கடைக் கால்வாயில் அபுதாஹிா் பாஷா உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அவரது உடலில் கத்திக் குத்து காயங்கள் இருந்தன.

இதுகுறித்து ஆா்.எஸ்.புரம் காவல் ஆய்வாளா் காமாட்சிநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க கோவை மாநகரக் காவல் துணை ஆணையா் தேவநாதன் தலைமையில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

போலீஸாா் கூறும்போது, ‘மனைவியைப் பிரிந்து வசித்து வந்த அபுதாஹிா் பாஷாவுக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த கொலை வழக்கு தொடா்பாக அபுதாஹிா் பாஷாவின் நண்பா்கள் மற்றும் இவரிடம் கடன் பெற்றவா்கள் என பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதில் அபுதாஹிா் பாஷாவின் நெருங்கிய நண்பரான ஒருவருக்கு இந்த கொலையில் தொடா்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். கொலையில் தொடா்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவா்’ என்றனா்.