/
இருகூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை ( ஜூன் 12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: இருகூா், ஒண்டிப்புதூா், ஒட்டா்பாளையம், ராவத்தூா், பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப்புதூா், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கிட்டாபுரம், தொட்டிபாளையம் (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்பகவுண்டன்புதூா்.





