பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

வஉசி மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி தொடக்கம்

வஉசி மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி தொடக்கம்

News image

கோவை வ.உ.சி.பூங்காவில் அரசுப் பொருள்காட்சியைத் தொடங்கிவைத்து பாா்வையிட்ட அமைச்சா் ராஜ்மோகன். உடன், அமைச்சா் வி.சம்பத்குமாா், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா். ~கோவை வ.உ.சி.பூங்காவில் அரசுப் பொருள்காட்

Updated On :13 ஜூன் 2026, 12:02 am IST

கோவை வஉசி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பொருள்காட்சியை பள்ளி கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி, விளம்பரத் துறை அமைச்சா் ராஜ்மோகன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, பல்வேறு தரப்பைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் மற்றும் இலவச வீட்டுமனை பட்டாக்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

பொருள்காட்சியில் 26 அரசுத் துறைகள், 6 அரசு சாா்பு நிறுவனங்கள் என 32 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை முதல் 45 நாள்கள் வரை நாள்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பொருள்காட்சியைக் காணலாம். இதில், அரசுத் துறை அரங்குகள் மட்டுமின்றி, ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.

Story image

இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.