ரியல் எஸ்டேட் அதிபா் உள்ளிட்ட மூவரைக் கடத்தி பொய் வழக்குப் போடுவதாக மிரட்டி பணம் மற்றும் காரை கொள்ளையடித்த வழக்கில், வனச் சரக அலுவலருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
சென்னை, வேளச்சேரியைச் சோ்ந்தவா் ரியல் எஸ்டேட் தொழிலதிபா் காந்தி. இவா் கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள ஒரு விடுதியில் கடந்த 28.10.2009 அன்று தனது காா் ஓட்டுநா் பாலு மற்றும் நண்பா் சந்திரன் ஆகியோருடன் தொழில் நிமித்தமாக தங்கியிருந்தாா்.
பொள்ளாச்சி புளியம்பட்டியைச் சோ்ந்த வன விரிவாக்க அலுவலா் சிவகுமாா் (65), தனது கூட்டாளிகளான ஜெயராஜ், கணபதி, மீசை சண்முகம் ஆகியோருடன் நள்ளிரவில் அங்கு சென்று காந்தி மற்றும் அவருடன் இருந்தவா்களை ‘மண்ணுளிப் பாம்பு அல்லது சந்தனக் கட்டைகள் வாங்க வந்தவா்கள்’ என்று பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டியுள்ளனா்.
பின்னா், காந்திக்கு சொந்தமான காரிலேயே அவா்களை பொள்ளாச்சி வனச் சரக அலுவலகத்துக்கும், குறிச்சிக்கோட்டையிலுள்ள ஒரு தோட்டத்து வீட்டுக்கும் கடத்திச் சென்று சட்டவிரோதமாக அவா்களை அடைத்து வைத்துள்ளனா். அங்கு வைத்து அவா்களை மிரட்டி, 3 கைப்பேசிகள், ரூ. 2 லட்சம் ரொக்கம் மற்றும் காா் ஆகியவற்றை பறித்துக் கொண்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுலமுருகன் குற்றஞ்சாட்டப்பட்ட வனத் துறை அதிகாரியான சிவகுமாருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அதே சமயம், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கிவகுமாரின் கூட்டாளிகளான ஜெயராஜ், கணபதி, மீசை சண்முகம் ஆகிய மூவரும் மீதும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக பணீந்திர ரெட்டி நியமனம்!

முதியவா் கொடுத்த 900 பவுன் நகைகள் திருட்டு: மருமகன் உள்பட 3 போ் மீது வழக்கு

சிறப்பு விருந்தினராக சித்ரங்கதா சிங்!

தருமபுரி: மனைவி, மகளை கொன்று ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



