முதல்வர் விஜய் முன்னிலையில் 3 திட்டங்களுக்கு ஒப்பந்தம் கையொப்பம்!நீதித் துறையில் செய்யறிவு! வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்! கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

சரிந்து மீளும் பங்குச்சந்தை! ஐடி, ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

News image

பங்குச்சந்தை - கோப்புப்படம்

Updated On :4 ஜூன் 2026, 11:28 am IST

பங்குச்சந்தைகள் இன்று(ஜூன் 4) ஏற்ற, இறக்கத்தில் மாறி மாறி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,935.83 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.20 மணியளவில் சென்செக்ஸ் 64.33 புள்ளிகள் குறைந்து 74,283.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 15.80
புள்ளிகள் குறைந்து 23,389.80 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் பங்குகள் முறையே 0.67, 0.57 சதவீதம் உயர்ந்துள்ளன.

துறைரீதியாக நிஃப்டி ஐடி, ரியல் எஸ்டேட், தனியார் வங்கிகளின் குறியீடுகள் சரிவைச் சந்தித்த நிலையில் நிஃப்டி நுகர்வோர் நீடித்த பொருட்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, கெமிக்கல் ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டன.

தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸ் 30 பங்குகளில் டிசிஎஸ், டைட்டன், என்டிபிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஐடிசி, பஜாஜ் பின்சர்வ் ஆகிய நிறுவனங்கள் உயர்ந்தும் மற்ற நிறுவனங்கள் சரிந்தும் வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தக தொடக்கத்தில் 95.71 ஆக இருந்தது.

Summary

Stock Market: Sensex trades volatile, Nifty near 23,400

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.