பங்குச்சந்தைகள் நேற்று உயர்வுடன் நிறைவடைந்த நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) நிலையாக வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,224.14 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.20 மணியளவில் சென்செக்ஸ் 14.65 புள்ளிகள் குறைந்து 76,474.31 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18.60 புள்ளிகள் உயர்ந்து 24,052 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸ் 30 பங்குகளில் எஸ்பிஐ, டிசிஎஸ், பெல், டெக் மஹிந்திரா, இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக், என்டிபிசி, அதானி போர்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் உயர்ந்தும் இதர நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன.
நிஃப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.53 சதவீதம், 0.97 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின்றன.
துறை வாரியாக, நிஃப்டி நுகர்வோர் பொருள்கள், ஹெல்த்கேர் மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவைச் சந்தித்த நிலையில் நிஃப்டி ஐடி, நிஃப்டி மீடியா பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டன.
கச்சா எண்ணெய் 1.7 சதவீதம் உயர்ந்து 97.78 டாலராக உள்ளது.
வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 பைசா குறைந்து 95.43 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது
Summary
Stock Market: Sensex in narrow range, Nifty tops 24,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஆட்டோ, வங்கிப் பங்குகள் லாபம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு! ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு!







