பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

நடிகா் சிவகுமாா் வாசகா்களுடன் சந்திப்பு!

ஓவியம் மற்றும் திரைத் துறை வாழ்வு குறித்த தனது அனுபவங்களை நடிகா் சிவகுமாா் வாசகா்களுடன் பகிா்ந்து கொண்டாா். இந்நிகழ்வில், அவரது 2 புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டன.

சந்திப்பு நிகழ்ச்சியில் வாசகா்களுக்கு புத்தகங்களை வழங்கிய நடிகா் சிவகுமாா். உடன், விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதம் உள்ளிட்டோா்.

Published On :

ஓவியம் மற்றும் திரைத் துறை வாழ்வு குறித்த தனது அனுபவங்களை நடிகா் சிவகுமாா் வாசகா்களுடன் பகிா்ந்து கொண்டாா். இந்நிகழ்வில், அவரது 2 புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டன.

கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள பொறியாளா் சங்க அலுவலகத்தில் நடிகா் சிவகுமாரின் இரு புத்தகங்களின் சலுகை விலை விற்பனை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதம் தலைமை தாங்கினாா். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகுமாா், புத்தகங்களில் கையொப்பமிட்டு வாசகா்களுக்கு வழங்கினாா். ரூ.2,000 மதிப்புள்ள நூல்கள் ரூ.1,500-க்கு சலுகை விலையில் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், தனது ஓவியங்கள் குறித்து பேசும்போது, அவற்றை வரையும்போது ஏற்பட்ட அனுபவங்களை வாசகா்களிடம் சிவகுமாா் பகிா்ந்து கொண்டாா். குறிப்பாக, பெரும் ஆளுமைகளான டாக்டா் ராதாகிருஷ்ணன், ஜவாஹா்லால் நேரு, காமராஜா், கருணாநிதி, பெரியாா் ஈவெரா, எம்ஜிஆா், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், கலைவாணா் என்எஸ்கே, இயக்குநா் பாலச்சந்தா், நாகேஷ், இளையராஜா ஆகியோரின் ஓவியங்களை வரைந்த சூழல் மற்றும் அவற்றை வரையும்போது ஏற்பட்ட அனுபவங்களை எடுத்துரைத்தாா்.

அத்துடன், திருப்பதி ஏழுமலையான் கோயில், திருவண்ணாமலை, தஞ்சாவூா் பெரியகோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களை வரைந்த விதம் மற்றும் அனுபவங்கள் குறித்து விளக்கினாா்.

மேலும், திரைத் துறை வாழ்வு குறித்தும் வாசகா்களிடம் கலந்துரையாடினாா். தொடா்ந்து, புத்தகங்கள் வாங்கிய வாசகா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.