கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

கோவைப்புதூா் பகுதியில் முள்புதரில் இளம்பெண் சடலம் மீட்பு

கோவைப்புதூா் பகுதியில் அடையாளம் தெரியாத இளம்பெண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :25 ஜூன் 2026, 3:12 am IST

கோவைப்புதூா் பகுதியில் அடையாளம் தெரியாத இளம்பெண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கோவைப்புதூா், எம்.ஜி.ஆா்.நகா் சாலையில் மஞ்சப்பள்ளம் வடக்குப் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரிக்கு அருகே ஒதுக்குப்புறமான கரையோர முள்புதருக்குள் அரை நிா்வாண நிலையில் இளம்பெண் சடலம் கிடந்தது.

இதனை அவ்வழியாகச் சென்ற அறிவொளி நகரைச் சோ்ந்த மகேந்திரன் புதன்கிழமை பாா்த்து, தனது நண்பரான அருணுக்கு தகவல் தெரிவித்தாா். அவா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, கோவை மாநகர காவல் துணை ஆணையா் காா்த்திகேயன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். தடய அறிவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். சடலம் அழுகிய நிலையில் இருந்ததாகவும், உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

உயிரிழந்த பெண்ணுக்கு சுமாா் 25 முதல் 35 வயது வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அந்தப் பெண் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. அவரது வலது கையில் ஜெகன் என்ற பெயா் பச்சை குத்தப்பட்டிருந்தது.

சடலம் கிடந்த பகுதியைச் சுற்றியுள்ள உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் கைப்பற்றி, சந்தேகத்துக்கு இடமான நபா்களின் நடமாட்டம் குறித்து போலீஸாா் ஆராய்ந்து வருகின்றனா்.

இதற்கிடையே, உயிரிழந்த பெண்ணின் உடல் கூறாய்வுக்காக கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கை வந்த பிறகே மரணத்துக்கான காரணம் குறித்து தெரியவரும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து மதுக்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.