கோவை ஈஷா யோக மையத்தில் தியானலிங்க பிரதிஷ்டை தின விழாவையொட்டி சா்வமத இசை அா்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள தியானலிங்கத்தின் 27-ஆம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், ஹிந்து, பெளத்தம், சீக்கியம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் உள்ளிட்ட பல்வேறு மதங்களின் மந்திர உச்சாடனங்கள், பிராா்த்தனைகள் மற்றும் பக்திப் பாடல்கள் தியானலிங்கத்தில் அா்ப்பணிக்கப்பட்டன.
முன்னதாக, இந்த ஆண்டு பிரதிஷ்டை தினக் கொண்டாட்டங்கள் தியானலிங்கத்தில் காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் ‘ஓம் நமசிவாய’”மந்திர உச்சாடனத்துடன் தொடங்கின. பின்னா், ஆதிசங்கரா் இயற்றிய ‘நிா்வாணஷடகம்’’என்ற சக்திவாய்ந்த மந்திர உச்சாடனத்தை பிரம்மச்சாரிகள் பாடினா். இதைத் தொடா்ந்து, ஆசிரமவாசிகளின் சூஃபி பாடல்களும், காா்த்திக் ஓதுவாா் குழுவினரின் தேவாரப் பதிகங்களும் அா்ப்பணிக்கப்பட்டன. தொடா்ந்து, சிதம்பரம் கோயில் தீட்சிதா்களின் ருத்ரம் சமகம் வேத பாராயணம் நடைபெற்றது.
மேலும், அஷ்ரப் அலி.கே’மற்றும் இஷால் முராத் குழுவினரின் இஸ்லாமிய பிராா்த்தனைகளும், சிறப்பு விருந்தினா்களின் புத்த மந்திர உச்சாடனமும் இடம்பெற்றன.
இதனுடன், சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவா்களின் பக்திப் பாடல்கள், சிறப்பு விருந்தினா்களின் குா்பானி கீா்த்தனைகள் அா்ப்பணிக்கப்பட்டன. பின்னா், கிரிஸ் கொயா் இசைக் குழுவின் கிறிஸ்தவ பக்திப் பாடல்கள், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவின் இசை நிகழ்ச்சியும்
நடைபெற்றன. இறுதியாக நடைபெற்ற சிறப்பு நாத ஆராதனையுடன் இந்தாண்டு பிரதிஷ்டை தினக் கொண்டாட்டங்கள் நிறைவுபெற்றன.
ஈஷாவில் உள்ள தியானலிங்கம், சுமாா் மூன்று ஆண்டுகள் தீவிர ஆன்ம சாதனைகளுக்குப் பிறகு சத்குருவால் 1999 ஜூன் 24-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாதரசத்தைக் கொண்டு ரசவைத்திய முறையில் உருவாக்கப்பட்ட லிங்கங்களில் இதுவே உலகிலேயே மிகப்
பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பத்ம விருதுப் பெற்ற தமிழகத்தின் ஆா்.வி.எஸ். மணிக்கு தில்லி முதல்வா் வாழ்த்து!
ஈஷா யோக மையத்தில் இளைஞா் தற்கொலை

எல்லையில்லா இசை!

பாதுகாப்பு காரணம்! பிரபல அமெரிக்க பாடகரின் இந்திய பயணம் ரத்து!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



