திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

பாதுகாப்பு காரணம்! பிரபல அமெரிக்க பாடகரின் இந்திய பயணம் ரத்து!

அமெரிக்க பாடகர் கன்யா வெஸ்ட்டின் இந்திய இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது...

Kanye West

கன்யா வெஸ்ட் - ENS

Published On :15 மே 2026, 8:29 pm IST

பிரபல அமெரிக்க பாடகர் கன்யா வெஸ்ட்டின் இந்திய இசை நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக பிரபல அமெரிக்க பாடகர் கன்யா வெஸ்ட்டின் இசை நிகழ்ச்சி வரும் மே 23 அன்று நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், இந்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, தில்லியில் நடைபெறவிருந்த கன்யா வெஸ்ட்டின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, இன்று (மே 15) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,

“பங்கேற்பாளர்கள் மற்றும் இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தில்லியில் வரும் மே 23 ஆம் தேதி நடைபெறவிருந்த நாட்டின் மிகப் பெரிய இசை நிகழ்ச்சியான கன்யா வெஸ்ட்டின் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகின்றது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கன்யா வெஸ்ட்டின் தில்லி இசை நிகழ்ச்சி மே 29 அன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், புவிசார் அரசியல் சூழலும், பிராந்திய பதற்றங்களும் நிலவி வருவதால் முன்கூட்டியே மே 23 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that a concert by popular American singer Kanye West in India has been cancelled due to security reasons.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.