டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

குஜராத்: பண மழையில் நனைந்த பாடகர்!

குஜராத்தில் இசை நிகழ்ச்சியின்போது பிரபல பாடகர் மீது மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகளை கொட்டி அவரையே மூழ்கடித்தனர்.

Gujarati Folk Singer Continues Singing As Devotees Rain Lakhs on Him, Video Viral

பாடகர் கோபால் சாது.

Published On :

குஜராத்தில் இசை நிகழ்ச்சியின்போது பிரபல பாடகர் மீது மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகளை கொட்டி அவரையே மூழ்கடித்தனர்.

குஜராத் மாநிலம், ஜுனாகத் அருகே உள்ள கம்பாலியா கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய டாய்ரோ நிகழ்ச்சியில் பிரபல பஜனை பாடகர் கோபால் சாது பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மீது ரூபாய் நோட்டுகளை மூட்டை மூட்டையாக கொட்டி அவரையே பக்தர்கள் மூழ்கடித்தனர். தற்போது இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த விடியோவில், பாடகர் சாது மேடையில் அமர்ந்து ஹார்மோனியம் வாசிப்பதைக் காண முடிகிறது. அதே நேரத்தில், மக்கள் தொடர்ந்து கட்டுக்கட்டாகவும், மூட்டை மூட்டையாகவும் பணத்தை அவருக்கு முன்னால் குவித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் பாடகர் வெளியவே தெரியாத அளவுக்கு ரூபாய் நோட்டுகளால் மூழ்கடிக்கப்படுகிறார்.

இருப்பினும், பாடகர் எதற்கும் அசராமல் தனது பாடலைத் தொடர்ந்தார். 'டாய்ரோ' என்பது குஜராத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியாகும். இதில் இசை, கதை சொல்லுதல், பக்திப் பாடல்கள் மற்றும் நகைச்சுவை ஆகியவை கலந்திருக்கும். குஜராத்தின் கிராமப்புறங்களில் இந்த நிகழ்ச்சிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

A viral video from Gujarat has left social media both amused and stunned after folk singer Gopal Sadhu was nearly buried under piles of cash while performing at a traditional Dayro event.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.