புதுச்சேரி 16வது சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக அதிமுக மாநிலச் செயலரும், உப்பளம் தொகுதி எம்எல்ஏவுமான அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் என். ரங்கசாமி பரிந்துரையின் பேரில் அவரை தற்காலிக பேரவைத் தலைவராக நியமனம் செய்து துணைநிலை ஆளுநர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். தற்காலிக பேரவைத் தலைவராக அவர் பதவியேற்றதும், அனைத்து எம்.எல். ஏ.,க்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
30 உறுப்பினா்களைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு, கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில் என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது.
ஆட்சியமைக்க 16 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் என்.ஆா்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக 1 தலா ஒரு தொகுதிகள் என 18 இடங்களில் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து புதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி புதன்கிழமை பதவியேற்றாா்.
அவருடன் அமைச்சா்களாக ஆ.நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆகியோரும் பதவியேற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Lieutenant Governor K Kailashnathan on Friday appointed AIADMK legislator A Anbalagan as pro-tem Speaker of the 16th Legislative Assembly of Puducherry.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தலைவராக ரதீந்திர போஸ் போட்டியின்றி தேர்வு!

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே! பேரவைச் செயலரிடம் கடிதம்
இடைக்கால பேரவைத் தலைவராக மு.வீ.கருப்பையா பதவியேற்பு!

புதுச்சேரி அமைச்சரவையில் அதிமுக இடம் கேட்கும்: அன்பழகன்
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை


