புதுச்சேரியில் 3 மணி நேரம் கொடை மழை! மக்கள் மகிழ்ச்சி!!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?பகல் நேரத்தைப் போல இரவிலும் வீடுகளுக்குள் வெப்பம்! ஆய்வில் அதிர்ச்சிஇபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனைஅதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசுஅடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

மேற்கு வங்க பேரவைத் தலைவராக ரதீந்திர போஸ் போட்டியின்றி தேர்வு!

மேற்கு வங்கத்தில் பேரவைத் தலைவராக ரதீந்திர போஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறித்து...

News image

எம்.எல்.ஏ. ரதீந்திர போஸ், சுவேந்து அதிகாரி - ANI

Updated On :1 மணி நேரம் முன்பு

மேற்கு வங்கத்தில் 18 ஆவது பேரவைத் தலைவராக பாஜக எம்.எல்.ஏ. ரதீந்திர போஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி பேரவையில் ரதீந்திர போஸ்-இன் பெயரை முன்மொழிந்ததைத் தொடர்ந்து, இடைக்கால பேரவைத் தலைவர் தபஸ் ராய், குரல் வாக்கெடுப்பை நடத்தினார்.

அப்போது, பாஜக சார்பில் வெற்றிபெற்ற 207 உறுப்பினர்களும் ஒருமனதாக ரதீந்திர போஸ்-க்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் பேரவைத் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம், மாநிலத்தின் வடக்குப் பகுதியிலிருந்து இப்பதவியை வகிக்கும் முதல் சட்டப்பேரவை உறுப்பினராக அவர் உள்ளார்.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில் 207 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற்றது. இதன் மூலமாக, திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து பாஜக ஆட்சி அமைத்தது.

புதிதாக பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு அரசு அதிகாரிகள் இடமாற்றம், பள்ளிகளில் நாள்தோறும் கடவுள் வாழ்த்தாக வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டும் போன்ற புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

In West Bengal, BJP MLA Rathindra Bose has been elected unopposed as the Speaker of the 18th Legislative Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.