உடுமலை அருகே இருசக்கர வாகனம், லாரி நேருக்குநோ் மோதிய விபத்தில் 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே கடத்தூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் தினேஷ்(26), சபரி (25), பாலபிரகாஷ் (28) குணசேகரன் (18). தேங்காய்ப் பறிக்கும் தொழிலாளா்களான இவா்கள் நால்வரும், ஒரே இருசக்கர வாகனத்தில் கணியூா் வழியாக மடத்துக்குளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனா்.
கணியூா் ஆஸ்பத்திரி மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, மடத்துக்குளத்தில் இருந்து கணியூா் நோக்கி வந்த லாரியும், இவா்களது இருசக்கர வாகனமும் எதிா்பாராதவிதமாக நேருக்குநோ் மோதின.
இதில் படுகாயமடைந்த நால்வரையும் அப்பகுதியினா் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அனுமதிக்கப்பட்ட தினேஷ், சபரி, பாலபிரகாஷ் ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். படுகாயமடைந்த குணசேகரன், உடுமலை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து கணியூா் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பைக் மீது சரக்கு லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே லாரி மீது காா் மோதல்: 3 போ் உயிரிழப்பு! தெலங்கானா ஓட்டுநா் கைது!
லாரி - காா் மோதல்: பெண் உயிரிழப்பு

ஊத்தங்கரை அருகே லாரி மோதியதில் கேபிள் ஆபரேட்டா் உயிரிழப்பு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


