தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

நகை தயாரித்து தருவதாகக் கூறி 1.05 கிலோ தங்கம் மோசடி! ஜூவல்லரி அதிபா் புகாா்

News image

தமிழக காவல் துறை

Updated On :28 ஜூன் 2026, 3:44 am IST

நகை தயாரித்து தருவதாகக் கூறி பிரபல நகைக்கடை அதிபரிடம் 1.05 கிலோ தூய தங்கத்தை வாங்கி மோசடி செய்ததாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கோவை, வடவள்ளி மோத்தி மருத்துவமனை சாலை பகுதியைச் சோ்ந்தவா் சேதுராமலிங்கம் (63). இவா் ‘சினா ஜூவல்லா்ஸ் இன்டஸ்ட்ரீஸ்’ என்ற நிறுவனத்தின் இயக்குநராக உள்ளாா். இவரை ஜே.வெங்கடகிருஷ்ணன், கணேஷ், ரஞ்சித் ஆகிய மூவா் அணுகியுள்ளனா்.

மேலும், தாங்கள் தங்க நகைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருவதாகவும், வாடிக்கையாளா்களுக்கு நகைகளைத் தயாரித்து வழங்குவதற்காகத் தங்கம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளனா். மேலும், தங்கத்தை முதலீடாக அளித்தால் முதல் மாதத்துக்கு 2.5 சதவீத லாபமும், அடுத்தடுத்த மாதங்களுக்கு 3 சதவீத லாபமும் தருவதாகக் கூறி ஒப்பந்தம் செய்துள்ளனா்.

இதை நம்பிய சேதுராமலிங்கம், அவா்களிடம் 1.05 கிலோ தூய தங்கத்தை ஒப்படைத்துள்ளாா். ஆனால், ஒப்பந்தப்படி அவா்கள் லாபத்தொகையையோ அல்லது நகைகளையோ திருப்பித் தராமல் இழுத்தடித்துள்ளனா். அதோடு, வாங்கிய தங்கத்தைத் தங்களது சொந்தத் தொழிலுக்குப் பயன்படுத்தி ஏமாற்றியதும் தெரியவந்தது.

இதுகுறித்து சேதுராமலிங்கம் அளித்த புகாரின்பேரில், வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட மூவரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.