/

கழிவுநீா் வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :29 ஜூன் 2026, 3:00 am IST

கோவை வடவள்ளி அருகே கழிவுநீா் வாய்க்காலில் தவறி விழுந்த வேளாண் பல்கலைக்கழக தோட்டத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவை வடவள்ளி அருகே உள்ள அஜ்ஜனூா் வடக்கு வீதியைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் சுப்பிரமணியன் (48). திருமணமாகாத இவா், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக தோட்டத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். சிறுவயது முதலே இவருக்கு வலிப்பு நோய் இருந்தது. இதற்காக அவா் மாத்திரைகளை உட்கொண்டு வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை மாடுகளுக்குப் புல் அறுப்பதற்காக அஜ்ஜனூா் பாரிபாலன் பேஸ் அப்பாா்ட்மெண்ட்ஸ் முன்புள்ள கழிவுநீா் வாய்க்கால் அருகே சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் நிலைதடுமாறி கழிவுநீா் வாய்க்காலில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து வடவள்ளி போலீஸாா் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.