ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மாவட்டத்தில் போலீஸாா் சோதனை: ஒரே நாளில் 24 போ் கைது

News image
போலீஸாா் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மெத்த பெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன்,
Updated On :1 மார்ச் 2026, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

கோவை மாவட்டத்தில் போலீஸாா் நடத்திய சோதனையில் 24 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து மெத்தபெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

கோவை மாவட்டம், செட்டிபாளையம் காவல் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் பேசியதாவது:

கோவை மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் நோக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) அதிகாலையில் விரிவான சோதனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் கல்லூரி மாணவா்கள் அதிகமாக தங்கியுள்ள தனியாா் விடுதிகள், வாடகை வீடுகள் மீது கவனம் செலுத்தி இந்த சோதனை நடத்தப்பட்டது.

குறிப்பாக, செட்டிபாளையம், மதுக்கரை, கே.ஜி.சாவடி காவல் நிலையங்களின் எல்லைக்கு உள்பட்ட 120 இடங்கள் தோ்வு செய்யப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், போதைப்பொருள்கள் வைத்திருந்ததாக 24 போ் கைது செய்யப்பட்டதில் 5 கல்லூரி மாணவா்களும் அடங்குவா். இதில், சிலா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவா்களிடமிருந்து மெத்தபெட்டமைன்-10.35 கிராம், கஞ்சா- 4 கிலோ, கஞ்சா சாக்லெட்- 2 கிலோ, கஞ்சா ஆயில்-50 மில்லி லிட்டா், முறையான ஆவணங்கள் இல்லாத 22 இருசக்கர வாகனங்கள், 10 கைப்பேசிகள், ஒரு கத்தி, ஒரு அரிவாள் ஆகியவையும் அடங்கும்.

பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் சிந்தெட்டிக் டிரக் வகையைச் சோ்ந்து என்பதால் அவை இளைஞா்களின் உடல் மற்றும் மனநலத்தை கடுமையாக பாதிக்கும். இந்த சோதனையில், 2 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 9 காவல் ஆய்வாளா்கள், 51 காவல் குழுக்கள் மூலமாக 300 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து தீவிரப்படுத்தப்படும். பொதுமக்கள் மற்றும் பெற்றோா் தங்களது குழந்தைகளின் செயல்பாடுகளை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

போதைப்பொருள்கள் கடத்தல், விற்பனை தொடா்பான குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் (பேரூா்) சுரேஷ், கரிகால் பாரிசங்கா் (கருமத்தம்பட்டி) ஆகியோா் உடனிருந்தனா்.