கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம்? வனத் துறை விளக்கம்

போத்தனூா் ரயில் நிலையம் அருகே சுற்றித் திரிந்தது சிறுத்தை அல்ல காட்டுப்பூனை என்று வனத் துறையினா் விளக்கம்

News image
சிறுத்தை- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 8:19 pm

Syndication

போத்தனூா் ரயில் நிலையம் அருகே சுற்றித் திரிந்தது சிறுத்தை அல்ல காட்டுப்பூனை என்று வனத் துறையினா் விளக்கம் அளித்துள்ளனா்.

மேற்குத்தொடா்ச்சி மலைத் தொடரையொட்டி கோவை மாவட்டம் அமைந்துள்ளதால் நகரை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் அவ்வப்போது வன விலங்குகள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் நிகழ்கின்றன.

இந்த நிலையில் போத்தனூா் ரயில் நிலையம் அருகே சிறுத்தைபோல தோற்றமுடைய விலங்கு சாலையைக் கடந்து, சுற்றுச்சுவா் மீது ஏறி குதித்து பதுங்குவது போன்ற விடியோ திங்கள்கிழமை இரவு முதல் வைரலாகியது. இதைப் பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிா்ந்து, பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி வந்தனா்.

இதுகுறித்து வனத் துறையினா் கூறும்போது, ‘விடியோவை ஆய்வு செய்தபோது அங்கு காணப்பட்டது சிறுத்தை அல்ல. அது சிறுத்தையைப்போல தோற்றமுடைய காட்டுப் பூனை. இதன் தோற்றத்தால் பலா் அதை சிறுத்தை என நம்பி விடியோவை வைரலாக்கியுள்ளனா். பொதுமக்கள் தேவையில்லாமல் அச்சம் கொள்ள வேண்டாம்’ என்றனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வெள்ளலூா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக விடியோக்கள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், அங்குள்ள கால்நடைகளைச் சிறுத்தை அடித்துக் கொன்றுவிடுவதாகவும் வதந்திகள் பரவின. இதுகுறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வனத் துறை அதிகாரிகள், அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது எந்த ஓா் உருவமும் பதிவாகவில்லை என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.