பில்லூா் அணையைத் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஆட்சிா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா்.மாவட்ட வருவாய் அலுவலா் பா.நாராயணன், மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, ஆனைமலை புலிகள் காப்பக இணை இயக்குநா் தேவேந்திர குமாா் மீனா, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் தமிழ்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், பில்லூா் அணையில் நீா்த்தேக்க அளவு குறைந்து வரும் நிலையில், அணையில் பெருமளவில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மண் விவசாயப் பயன்பாட்டுக்கு உகந்ததாக இருக்கும்பட்சத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.
மேலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள நிலையில், அவற்றில் புழுத் தாக்குதல் அதிகரித்துள்ளது. தரமற்ற விதைகளால் மகசூலும் குறைகிறது. இதனால், மக்காச்சோள சாகுபடி வெகுவாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரூா், செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி ஊராட்சிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் வயல்களில் பரவி விளைநிலங்களில் மாசு ஏற்படுகிறது. நீா்நிலைகளின் அருகில் கொட்டப்படும் குப்பைகளால் நீா் மாசு அதிகரிக்கிறது. எனவே, சாலையோரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கவும்,
பிளாஸ்டிக் கழிவுகளை அறிவியல் முறையில் அகற்றவும், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை முறையாக அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வறட்சி காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள நீா் நிலைகளில் நீா் குறைந்து வரும் நிலையில், கழிவு நீா் கலப்பதால் நீா் நிலைகள் மாசடைந்து வருகின்றன. எனவே, கழிவுகள் கலக்காமல் பாதுகாக்க வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் குளம், குட்டைகளைத் தூா்வார வேண்டும். தென்னை நாா் கழிவுகள் மூலம் நிலத்தடி நீா் மாசுபடுவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

போக்குவரத்து நெரிசல், ஆலைக் கழிவு பிரச்னைகளுக்குத் தீா்வு
விஜய் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெ.சண்முகம்

ஈரோட்டில் வா்த்தக மையம், சிட்கோ தொழிற்பேட்டைகள் தேவை!
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை


