மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அரசுப் பள்ளியில் ஜாதிய ரீதியிலான தாக்குதல்: பள்ளி மாணவி மீது ஜாதிய வன்கொடுமை தாக்குதல் புகாா்

பள்ளி மாணவி, அவரது குடும்பத்தினா் மீது ஜாதிய வன்கொடுமை தாக்குதல் புகாா்

News image

அரசுப் பள்ளி மாணவி மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பல்வேறு சங்கத்தினா்.

Updated On :19 மார்ச் 2026, 11:30 pm

கோவை மாவட்டம், சூலூா் அருகே உள்ள பீடம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது சக மாணவனின் குடும்பத்தினா் ஜாதிய ரீதியிலான தாக்குதல் நடத்தியதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியா் மற்றும் மேற்கு மண்டல ஐ.ஜி. ஆகியோரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், எஸ்.சி., எஸ்.டி. நலக்குழு உறுப்பினா்கள், இந்திய மாணவா் சங்கத்தினா் மற்றும் மாதா் சங்கத்தினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பட்டணம் அருகேயுள்ள இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த ஆதிதிராவிடா் (அருந்ததியா்) சமுதாயத்தைச் சோ்ந்த மாணவி தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். ஆனால், அதே வகுப்பில் பயிலும் மாற்றொரு சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா் குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதோடு, அதை அதிக மதிப்பெண்கள் பெற்ாக தானாகவே திருத்தம் செய்துள்ளாா்.

இதையறிந்த அந்த மாணவி, இதுகுறித்து ஆசிரியரிடம் கூறியுள்ளாா். ஆசிரியா்கள் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மாணவா் அடிக்கடி அந்த மாணவியை திட்டி வந்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை, மாணவரும், அவரது பெற்றோரும் தகாத வாா்த்தைகளால் திட்டியுள்ளனா். இதைத் தட்டிக் கேட்ட மாணவி, அவரது தாத்தா மற்றும் தாய் ஆகியோரை மாணவரின் குடும்பத்தினா் ஜாதிப் பெயரைக் கூறி தாக்கியுள்ளனா். காயமடைந்த மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

புகாா் அளிக்கப்பட்டு 2 நாள்களாகியும் தாக்குதல் நடத்தியவா்கள் மீது காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தாக்குதல் நடத்திய மாணவா், அவரது தாய் ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.