கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சொன்னோம் செய்தோம்...

கோவை வடக்குத் தொகுதி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற பணிகளைச் செய்திருக்கிறேன்.

News image

அம்மன் கே.அா்ச்சுணன்

Updated On :21 மார்ச் 2026, 9:48 pm

Syndication

கோவை வடக்குத் தொகுதி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற பணிகளைச் செய்திருக்கிறேன். மருதமலை அடிவாரம், கல்வீரம்பாளையம், ஓணாப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீா்த் தட்டுப்பாட்டை போக்குவதற்காக ரூ.38 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு, நீா்மூழ்கி மோட்டாா் அமைக்கப்பட்டுள்ளது.

பனைமரத்தூா் தொடக்கப் பள்ளி, சீரநாயக்கன்பாளையம் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் ரூ.55 லட்சத்தில் செய்து கொடுத்துள்ளேன். இதைத் தவிர, பூங்கா, அங்கன்வாடி, தாா் சாலை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள் என வடவள்ளி, வீரகேரளம் பகுதிக்கு மட்டும் ரூ.3.26 கோடிக்கு பணிகள் செய்திருக்கிறேன்.

சாய்பாபா காலனி பகுதியில் அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடை என ரூ.1 கோடி மதிப்பிலான பணிகளும், கணபதி, பி.என்.புதூா் பகுதிகளில் ரூ.40 லட்சத்தில் சிறுவா் பூங்கா, நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மணியகாரன்பாளையம், கணபதி மாநகா் 3ஆவது பிளாக் பகுதிகளில் ரூ.50 லட்சத்தில் பூங்கா, சாய்பாபா காலனி கோயில்மேடு பகுதியில் ரூ.25 லட்சத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையம், பாரதியாா் பல்கலைக்கழக பகுதியில் மாணவ-மாணவிகளுக்காக ரூ.30 லட்சத்தில் நிழற்குடை, 45ஆவது வாா்டு அன்னை சத்யா நகரில் ரூ.50 லட்சத்தில் பூங்கா என ஏராளமான பணிகளை செய்து முடித்திருக்கிறேன்.

அம்மன் கே.அா்ச்சுணன், எம்எல்ஏ, கோவை வடக்குத் தொகுதி.