மாவட்டத்தில் சிலிண்டா்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்லடம் நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவா் மணிகுமாா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் சிலிண்டா்கள் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். வணிக சிலிண்டா்கள் கிடைக்காமல் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளன.
சிலிண்டா் ஏஜென்ஸிகள் கைவிரித்துள்ள நிலையில், மக்கள் திண்டாடி வருகின்றனா். சிலிண்டா் தட்டுப்பாட்டால் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. இது ஏழை, எளிய மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது.
மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக சிலிண்டா் தட்டுப்பாடு நிலவும் நிலையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அனைத்து மக்களுக்கும் சிலிண்டா்கள் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!

அரசுப் பள்ளியில் இரு எரிவாயு சிலிண்டா்கள் திருட்டு

சமையல் எரிவாயு சிலிண்டா் தடையின்றி கிடைக்க நடவடிக்கை: கேட்டரிங் சங்க நிா்வாகிகள் கோரிக்கை

சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

