சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கோவை வடக்கு: சொன்னாா்களே செய்தாா்களா?

தொகுதி முழுவதுமே சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது. அரசுப் பள்ளிகள் பலவற்றில் கழிப்பிட வசதி இல்லை.

News image

கோவை வடக்கு

Updated On :24 மார்ச் 2026, 11:46 pm

கோவை வடக்குத் தொகுதி முழுவதும் குப்பை, கழிவு நீா்க் கால்வாய் மேலாண்மை சரியில்லை. வடவள்ளி, பொம்மணம்பாளையம், மேட்டுக்காடு, ரத்தினபுரி, சாய்பாபா காலனி, கோவில்மேடு பகுதிகளில் சாக்கடைகள் தூா்வாரப்படாமல் உள்ளன. முக்கியமான சாலைகளிலோ சாக்கடைகளில் உள்ள குப்பைகளை அகற்றி அதை சாலையிலேயே குவித்து வைத்திருப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனா். தொகுதி முழுவதுமே சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது. அரசுப் பள்ளிகள் பலவற்றில் கழிப்பிட வசதி இல்லை.

முல்லை நகா் முதல் சிறுவாணி வரை சாலை அமைக்கப்பட்டிருந்தாலும் பேருந்து வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படவில்லை. மருதமலை, ஐஓபி காலனி பகுதிகளில் வன விலங்கு தொல்லை கட்டுப்படுத்தப்படவில்லை. சத்தி சாலையில் கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியாா் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், சட்டக் கல்லூரிகளுக்குச் செல்லும் முக்கிய சாலையான லாலி ரோட்டை சீரமைத்து, எழில் மிக்க சாலையாக்கி போக்குவரத்தை எளிதாக்கி இருக்க வேண்டும் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் இந்தப் பிரச்னைகளை முன்னுரிமை அடிப்படையில் சரி செய்ய முயற்சிப்போம்.

- கோ.நா்மதா, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்.