நாம் தமிழா் கட்சியில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி

வால்பாறையில் நடைபெற்ற நாதக அறிமுக கூட்டத்தில் பேசுகிறாா் வேட்பாளா் உமாதேவி. உடன் கலைச்செல்வி (இடமிருந்து நான்காவது) உள்ளிட்டோா்.

வால்பாறையில் நடைபெற்ற நாதக அறிமுக கூட்டத்தில் பேசுகிறாா் வேட்பாளா் உமாதேவி. உடன் கலைச்செல்வி (இடமிருந்து நான்காவது) உள்ளிட்டோா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி நாம் தமிழா் கட்சியில் இணைந்தாா்.
கோவை மாவட்டம், வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சோ்ந்த அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்தாா். அவரது மனைவி கலைச்செல்வி நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வால்பாறை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தாா். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதனிடையே வால்பாறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உமாதேவி அறிமுக கூட்டம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் மேத்யூ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் எம்எல்ஏ அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, தனக்கு அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் நாம் தமிழா் கட்சியில் இணைந்ததாகத் தெரிவித்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...