தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து போராட்டம்

கோவையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயா்த்தப்பட்டதைக் கண்டித்து இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

News image

வணிக சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

Updated On :8 மே 2026, 4:50 am IST

கோவையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயா்த்தப்பட்டதைக் கண்டித்து இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதுடன், தட்டுப்பாடு இல்லாமல் விநியோகம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கோவையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்டச் செயலா் சி.சிவசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் சி.பத்மநாபன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோவை குரு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் கனகராஜ், கிருஷ்ணமூா்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அப்பன் குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா்கள் ஜே.ஜேம்ஸ், சி.தங்கவேல், மாவட்டப் பொருளாளா் மு.வ.கல்யாணசுந்தரம், இளைஞா் பெருமன்றத்தின் அபிமன், மாதா் தேசிய சம்மேளனத்தின் கலா, கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலா் ப.பா.ரமணி, ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் அஸ்ரப் அலி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.