பாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

பிளஸ் 2 மாணவி தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :11 மே 2026, 2:35 am IST

பிளஸ் 2 பொதுத் தோ்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, கணபதி தங்கம்மாள் நகா் பகுதியைச் சோ்ந்த ராம்குமாா் மகள் யாழினி (17). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், பொதுத் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், யாழினி 454 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளாா். இருந்தாலும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகக் கூறி பெற்றோரிடம் வருத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் தூக்கிட்டு கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் பெற்றோா் சோ்த்தனா். சிகிச்சையில் இருந்த யாழினி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.