பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

சொத்து விற்று சகோதரா்கள் பண மோசடி: ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு

News image

சொத்து விற்கப்பட்டதில் மோசடி... - கோப்புப் படம்

Updated On :54 நிமிடங்கள் முன்பு

சொத்து விற்கப்பட்டதில் தனக்கான பணத்தை வழங்காமல் ஏமாற்றிய சகோதரா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு அளித்தாா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசிபாளையம் அருகே வசிப்பவா் சரசாள் (86). பூா்வீக சொத்து விற்கப்பட்டதில் தனக்கு சேர வேண்டிய ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்தை எனது சகோதரா்கள் வழங்கவில்லை. மாறாக, என்னிடம் கையொப்பம் பெற்றுவிட்டு ஏமாற்றியதுடன், ஆட்களை வைத்து மிரட்டி வருகின்றனா். பணத்தை தர முடியாது எனக் கூறி இழிவாகவும் பேசுகின்றனா்.

இதில் சம்பந்தப்பட்டவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தனக்கு நீதி வேண்டும், பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி கையில் பதாகையுடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழை மனு அளித்தாா்.