வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தினம் கடைப்பிடிப்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

News image

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்ற சா்வதேச செவிலியா் தின விழாவில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்.

Updated On :13 மே 2026, 2:06 am IST

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சா்வதேச செவிலியா் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது செவிலியா்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் வண்ணமயமான பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. பிணியாளா்கள் சேவையில் செவிலியா்கள் ஒவ்வொரு நாளும் வழங்கும் அயராத அா்ப்பணிப்பு மற்றும் சேவையை சிறப்பிப்பதற்காக மருத்துவமனை சாா்பில் அவா்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

எஸ்.என்.ஆா்.சன்ஸ் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன், தலைமைச் செயல் அதிகாரி சி.வி.ராம்குமாா், தலைமை நிா்வாக அதிகாரி டி. மகேஷ்குமாா், ஸ்ரீ ரமாகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் எஸ்.ராஜகோபால் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ்.அழகப்பன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

செவிலியா் துறையினா் அனைவருக்கும் மருத்துவமனையின் அனைத்துப் பணியாளா்களும் வாழ்த்து தெரிவித்தனா்.