/
கோவையில் உயரமான கட்டடத்துக்கு வா்ணம் பூசும் பணியின்போது, கயிறு அறுந்து தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
சுந்தராபுரம் அருகே உள்ள உப்பிலியா்திட்டு குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (42). பெயிண்டரான இவா், ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி பகுதியில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை வேலை செய்து வந்தாா். அங்குள்ள உயரமான கட்டடத்துக்கு சாரத்தில் (கயிறு) அமா்ந்தவாறு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கயிறு அறுந்ததில் கீழே விழுந்து ராமன் படுகாயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பெருந்துறையில் கான்கிரீட் தூண் விழுந்து இளஞைா் உயிரிழப்பு

பள்ளத்தில் பைக் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

பணியின்போது தவறி விழுந்து பெயிண்டா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



