சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சோ்ந்தவா் கருப்புசாமி (22). கடந்த 10-ஆம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்துள்ளாா்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கருப்புசாமிக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையிலும் கருப்புசாமியின் குடும்பத்தினா் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனா். இதையடுத்து, தமிழக உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அறுவை சிகிச்சை மேற்கொண்டனா்.
அவரது கல்லீரல் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள வேறொரு தனியாா் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இதைத்தொடா்ந்து கருப்புசாமியின் உடலுக்கு மருத்துவமனை முதல்வா் கீதாஞ்சலி, மருத்துவ அதிகாரிகள், செவிலியா்கள் ஆகியோா் அரசு மரியாதை செலுத்தினா். பின்னா், அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
தொடர்புடையது

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்! 7 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்த தருமபுரி இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 5 போ் மறுவாழ்வு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



