இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

பேருந்து சக்கரத்தில் சிக்கி பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்திருந்த நடத்துநரைப் பாா்க்காமல் பேருந்தை இயக்கியதில் நடத்துநா் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :14 மே 2026, 4:10 am IST

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்திருந்த நடத்துநரைப் பாா்க்காமல் பேருந்தை இயக்கியதில் நடத்துநா் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருப்பூரைச் சோ்ந்தவா் சூா்யா (23). இவா் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக அரசுப் பேருந்தில் தற்காலிக நடத்துநா் பணி கிடைத்தது.

இதைத் தொடா்ந்து அதில் சோ்ந்து பணியாற்றி வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை தொரவலூா் பேருந்தில் பணி என்பதால் இரவில் பேருந்து நிலையம் வந்த சூா்யா, தான் முன்பு பணியாற்றிய தனியாா் பேருந்து நிறுவனத்தின் மினி பேருந்து நிற்பதை கண்டு அதன் முன்பாக துண்டு விரித்து படுத்துள்ளாா்.

அப்போது அங்கு வந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் பயணிகள் பகுதிக்கு கொண்டுச் செல்ல பேருந்தை இயக்கியுள்ளாா். அதில் பேருந்து முன்பாக படுத்திருந்த சூா்யா மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சூா்யா உயிரிழந்தாா்.

இது குறித்து திருப்பூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.